உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கரடு முரடான ரோடு, குடிநீரை விலைக்கு வாங்கும் பரிதாபம்; அவதியில் பாலையம்பட்டி வேல்முருகன் காலனி

கரடு முரடான ரோடு, குடிநீரை விலைக்கு வாங்கும் பரிதாபம்; அவதியில் பாலையம்பட்டி வேல்முருகன் காலனி

அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டை அருகே பாலையபட்டி வேல்முருகன் காலனியில் தெருகளில் கரடு முரடான ரோடு, வாறுகால் இல்லாததால் தேங்கும் கழிவுநீர், குடிநீர் இணைப்பு கொடுக்காததால் விலைக்கு வாங்கும் மக்கள், குழியலறை, கழிப்பறை உட்பட பல்வேறு வசதிகளின்றி மக்கள் சிரமமடைந்து வருகின்றனர்.அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்தது பாலையம்பட்டி ஊராட்சி உட்பட்டது வேல்முருகன் காலனி. இங்கு 5க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. மெயின் ரோட்டில் இருந்து இந்தப் பகுதிக்கு வருவதற்கு முறையான ரோடு இல்லை. கரடு முரடாகவும், கிடங்காகவும் இருப்பதால் வாகனங்கள், டூவீலர்களில் வந்து செல்ல முடியவில்லை. தெருக்களிலும் ரோடு இல்லாமல் மேடும் பள்ளமுமாக உள்ளது. பள்ளி செல்லும் மாணவர்கள் ஆட்டோ தெருக்களில் வர முடியாததால் மெயின் ரோட்டிற்கு நடந்து சென்று ஏற வேண்டி உள்ளது. தெருக்களில் வாறுகால் இல்லாததால் கழிவுநீர் ஆங்காங்கு தேங்கியுள்ளது. தெருக்களின் நடுவில் கழிவுநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகியும், சுகாதார கேடாகவும் உள்ளது. தெரு விளக்குகள் இல்லாததால், பாதைகள் முழுவதும் முட்புதர்களாக இருப்பதால் இரவு நேரங்களில் வர இப்பகுதி மக்கள் பயப்படுகின்றனர்.ஊராட்சி குடிநீர் இந்த பகுதியில் இல்லை. குடிநீரை தனியார் இடத்தில் விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர். ஊராட்சி மூலம் ஒரே ஒரு பொது அடி குழாய் மட்டும் தான் போடப்பட்டுள்ளது. ரோடு சரியில்லாததால் தனியார் குடிநீர் வண்டிகளும் தெருக்களில் வர மறுக்கிறது. இந்தப் பகுதிக்கு என பொதுக்கழிப்பறை, குளியலறை இல்லை. இந்தப் பகுதியில் தெரு நாய்கள் பன்றிகள் கூட்டம் கூட்டமாக திரிகின்றன. உச்சகட்ட சுகாதாரக் கேட்டில் இப்பகுதிகள் மக்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்

ரோடு அவசியம்

பிருந்தாதேவி, குடும்பத்தலைவி : வேல்முருகன் காலனியில் தெருக்களில் ரோடு அமைக்க பலமுறை கோரிக்கை வைத்து ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. மழைக்காலமானால் தெருக்களில் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக வீட்டை விட்டு வெளியில் வர முடியாத நிலையில் உள்ளது. எங்கள் பகுதிக்கு வரும் மெயின் ரோடு, தெருக்களில் ரோடு அமைக்க ஊராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குடிநீர் இல்லை

பாப்பா, குடும்பத் தலைவி : ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் ஊராட்சி குடிநீர் வழங்குகிறது. வேல்முருகன் காலனியில் மட்டும் குடிநீர் இல்லை. நாங்கள் தனியார் இடத்தில் குடம் 12 ரூபாய் கொடுத்து தான் குடிநீரை வாங்கி பயன்படுத்துகிறோம். ரோடு சரி இல்லாததால் குடிநீர் வண்டிகளும் தெருக்களில் வருவது இல்லை. ஊராட்சி நிர்வாகம் எங்களுக்கு குடிநீர், கூடுதலாக பொது அடி குழாய் வசதி செய்து தர வேண்டும்.

தெருக்களில் வரும் ஓடை நீர்

பஞ்சவர்ணம், குடும்பத்தலைவி : வேல்முருகன் காலனி பகுதியை ஒட்டி கண்மாய் உள்ளது. கண்மாய்க்குச் செல்லும் மழை நீர் வரத்து ஓடை பராமரிப்பு இல்லாததால் மழைக்காலங்களில் தண்ணீர் வரும்போது கண்மாய்க்குள் செல்ல முடியாமல் தெருக்களில் வீடுகளுக்குள் வந்து விடுகிறது. எங்கள் பகுதியில் ஓடையை ஒட்டி தடுப்புச் சுவர் கட்ட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை