உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சாத்துாரில் வங்கி வாசலில் டூவீலரில் வைத்த ரூ.6.47 லட்சம் திருட்டு

சாத்துாரில் வங்கி வாசலில் டூவீலரில் வைத்த ரூ.6.47 லட்சம் திருட்டு

சாத்துார்; சாத்துாரில் எஸ்.பி.ஐ. வங்கி வாசலில் டூவீலரில் வைத்த ரூ.6.47 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். துாத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தை சேர்ந்தவர் சிதம்பரம், 47. சென்னை கல்பாக்கத்தில் ஓட்டல் நடத்தி வருகிறார். சாத்துார் ஏ.ராமலிங்கபுரத்தில் தனது மாமியார் வீட்டிற்கு குடும்பத்துடன் வந்துள்ளார். நேற்று மதியம் 12:00 மணிக்கு இருசக்கர வாகனத்தில் சாத்துார் எஸ்.பி.ஐ. வங்கிக்கு வந்த அவர் அவரது கணக்கில் இருந்து ரூ 6.47 லட்சம் பணத்தை எடுத்துள்ளார். இதன் பின்னர் 12:40 மணிக்கு வங்கிக்கு வெளியே வந்த அவர் டூ வீலரின் சீட் கவரை திறந்து பாக்சில் ரூ 6.47 லட்சத்தை வைத்து விட்டு அருகில் உள்ள டீ கடைக்கு சென்று டீ சாப்பிட்டு விட்டு பின்னர் அங்கிருந்த தள்ளு வண்டி பழக்கடையில் பழங்கள் வாங்கி உள்ளார். பழங்களை வைக்க டூ வீலர் சீட் கவரை திறந்த போது அதிலிருந்த ரூ 6.47 லட்சத்தை காணவில்லை. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் டூவீலரில் விரல் ரேகைகளை பதிவு செய்தனர். வங்கியிலும் கடைகளிலும் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு பணத்தை திருடிய மர்ம நபர்களை சாத்துார் போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ