உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.8.49 லட்சம் மோசடி

விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.8.49 லட்சம் மோசடி

அருப்புக்கோட்டை:விமான நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் ரூ. 8 லட்சத்து 49 ஆயிரம் மோசடி செய்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.அருப்புக்கோட்டை மணி நகரம் சண்முகநாதபுரம் 6 வது தெருவை சேர்ந்தவர் திரவியராஜ், 69. இவரது மகன் ஜான்சன் பால் சிவில் இன்ஜினியரிங் படித்துள்ளார். இவருக்கு சென்னை விமான நிலையத்தில் கஸ்டமர் சர்வீஸ் உதவியாளர் வேலை வாங்கித் தருவதாக கூறி, அருப்புக்கோட்டை மதுரை ரோடு அனந்தபுரி நகரை சேர்ந்த ராஜா 53, என்பவர் 2021 ல் ரூ. 8 லட்சத்து 49 ஆயிரம் வாங்கியுள்ளார்.அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் வேலையில் சேர்வதற்குரிய ஆர்டரை வழங்கியுள்ளார்.மகனுடன் சென்னைக்கு சென்று விமான நிலைய அலுவலகத்தில் ஆர்டரை காட்டிய போது அங்குள்ள அதிகாரிகள் அது போலியானது என கூறினர்.இதுகுறித்து ராஜாவிடம் திரவியராஜ் கேட்ட போது, தேதி மாறி வந்த ஆர்டர் ஒரு மாதத்தில் வேலையில் சேர்த்து விடுகிறேன்.இல்லையெனில் பணத்தை திருப்பித் தருகிறேன் என கூறியுள்ளார். சொன்ன தேதியில் வேலையில் சேர்க்காமல், பணத்தையும் திருப்பி தர மறுத்த ராஜா மீது அருப்புக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் திரவியராஜ் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவுப்படி டவுன் போலீசார் ராஜா மீது வழக்குப்பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை