உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அருப்புக்கோட்டையில் ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலம்

அருப்புக்கோட்டையில் ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலம்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் விஜயதசமியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ்., அணி வகுப்பு ஊர்வலம் நடந்தது.புளியம்பட்டி ஆயிரங்கண் மாரியம்மன் கோயிலில் முன்பு ஊர்வலம் துவங்கியது. முன்னதாக சங்க கொடிக்கு மரியாதை செலுத்தப்பட்டது. ஊர்வலத்தை ஜில்லா சங்க சாலக் விஜயராகவன் துவக்கி வைத்தார். ஊர்வலம் சிவன் கோயில் சந்திப்பு முருகன் கோயில் திருச்சுழி ரோடு வழியாக நேரு மைதானத்தை அடைந்தது.ஏ.எஸ்.பி., மதிவாணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர். பின்னர் நடந்த கூட்டத்திற்கு முன்னாள் ஊராட்சி தலைவர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். விபாக் பிரசாரக் முகேஷ் சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பாளர் ராஜா செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை