உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் சங்காபிஷேகம்

இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் சங்காபிஷேகம்

சாத்துார்: சாத்துார் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் நேற்று சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் நடந்தது.தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் உலக மக்கள் அனைவரும் அமைதியுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ வேண்டி நேற்று கோயிலில் சிறப்பு யாகசாலை பூஜை நடந்தது. 1008 சங்குகள் அடுக்கி வைக்கப்பட்டு அவற்றில் புனித நீர் நிரப்பி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.கோயில் உதவி ஆணையாளர் இளங்கோவன், அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பங்கேற்றனர். * சாத்துார் பத்ரகாளியம்மன் கோயிலில் உள்ள விஸ்வநாதர் கோயிலில் 108 சங்காபிஷேகம் நடந்தது. * விருதுநகர் மீனாட்சி சொக்கநாதர் சுவாமி கோயிலில் 1008 சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டு சங்காபிஷேகம் பூஜைகள் நடந்தது. இதையடுத்து மூலவருக்கு புனித நீரால் அபிஷேகம், அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி