மேலும் செய்திகள்
பி.வி.பி. பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
31-Oct-2024
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., மேல்நிலை பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான தடகள போட்டிகளில் வென்று மாநில போட்டிகளில் விளையாட தகுதி பெற்றுள்ளனர்.தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பாக, மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகளில் இப்பள்ளி மாணவர்கள் 17 வயதுக்குட்பட்ட பிரிவில் 3000 மீட்டர் ஓட்ட போட்டியில் அடைக்கலம் முதலிடமும், 19 வயதுக்குட்பட்ட பிரிவு ஓட்ட போட்டியில் ஹரிதரன் முதலிடமும், 800 மீட்டர் ஓட்ட போட்டியில் பிரித்திவிராஜ் பாய் காட் முதலிடமும், 19 வயதுக்குட்பட்ட பிரிவில் முஹம்மது இஜ்ஜத் 100 மீட்டர் ஓட்ட போட்டியில் 2 வது இடமும் பெற்றுள்ளனர்.நான்கு பேரும் ஈரோட்டில் நடைபெற உள்ள மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.உயரம் தாண்டுதல் போட்டியில் 14 வயதுக்குட்பட்ட பிரிவில் கவின் 3 வது இடமும், ஈட்டி எறிதல் போட்டியில் ராஜபிரியன் 3 வது இடமும், முகமது இஜ்ஜத் ஓட்ட போட்டியில் 3 ம் இடமும் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை தலைவர் சுதாகர், பள்ளிச் செயலாளர் காசிமுருகன், தலைவர் ஜெயகணேஷ், தலைமை ஆசிரியர் ஆனந்தராஜ் மற்றும் நிர்வாகிகள் பாராட்டினர்.
31-Oct-2024