பள்ளி, கல்லுாரி செய்திகள்
ராஜபாளையம்:ராஜபாளையம் கேசா டி மிர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தமிழ், ஆங் கிலம், கணிதம், சமூக அறிவியல் உள்ளிட்ட மன்றங்கள் துவக்க விழா நடந்தது. மாவட்ட தனியார் பள்ளி கல்வி அலுவலர் சுப்பா ராஜூ தலைமை வகித்தார். முதுநிலை முதல்வர் அருணா, தாளாளர் வைமா திருப்பதி செல்வன் வரவேற்றனர். நிலவழகன், சுரேஷ் தலியத், ராமகிருஷ்ணா பாண்டியன், ராமசாமி பொன்னம்பலம் ஆகியோர் மன்ற தலைவர்கள், செயலாளர்களுக்கு பதவிப்பிரமானம் செய்தனர்.