உள்ளூர் செய்திகள்

பள்ளி ஆண்டு விழா

வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு ரங்காராவ் லயன்ஸ் பெண்கள் மெட்ரிகுலேஷன் பள்ளி மற்றும் மகாராஜபுரம் ரங்காராவ் லயன்ஸ் மேல்நிலைப்பள்ளிகளின் 41வது ஆண்டு விழா நடந்தது.பள்ளி தலைவர் சுந்தரராஜ பெருமாள் வரவேற்றார். தாளாளர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். பொருளாளர் டாக்டர் பால்சாமி நினைவு பரிசு வழங்கினார்.லயன்ஸ் துணை ஆளுநர் ஷாஜகான் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினார். மேனேஜிங் டைரக்டர் ராகவன், முன்னாள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் போஸ், லயன்ஸ் சங்கத் தலைவர் சுப்பையா, ஆரியன் மதுரம், செயலாளர் கூடலிங்கம் வாழ்த்துரையாற்றினர்.மேல்நிலைப்பள்ளி முதல்வர் காளீஸ்வரன், பெண்கள் பள்ளி முதல்வர் ராஜேஸ்வரி ஆண்டறிக்கை வாசித்தனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை