உள்ளூர் செய்திகள்

பள்ளி ஆண்டு விழா

சாத்துார், : சாத்துார் ஜிவி ஜெ இன்டர்நேஷனல் பள்ளியில் ஆண்டு விழாவை முன்னிட்டு விளையாட்டு விழா நடந்தது.பள்ளி மாணவர்கள் நான்கு அணிகளாக பிரிக்கப்பட்டு குழு மற்றும் தடகளப் போட்டிகள் நடத்தப் பட்டன. இப்போட்டிகளில் மஞ்சள் அணி சாம்பியன்ஷிப் வென்றது. இரண்டாவது இடத்தை பச்சை அணி பெற்றது. பள்ளி முதல்வர் சரவணன் மாணவர்களுக்கு பதக்கம், சான்றுகள் வழங்கினார்.மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. செயலாளர் வத்சலா தேவி, தாளாளர் ரமேஷ் கண்ணன் மற்றும் பெற்றோர்கள் மாணவர்கள் விழாவில் கலந்து கொண்டனர். அ.கீதா ஏற்பாடுகளை செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி