மேலும் செய்திகள்
போதை தடுப்பு கருத்தரங்கம்
29-Dec-2024
சிவகாசி: சிவகாசி காளீஸ்வரி கல்லுாரி முதுநிலை வணிகவியல் துறை சார்பில் சந்தைப்படுத்துதலில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை செயல்படுத்துதல் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. கல்லுாரி முதல்வர் பாலமுருகன் தலைமை வகித்தார். கல்லுாரி மாணவி பவித்ரா வரவேற்றார். துறை தலைவர் அமுதா ராணி வாழ்த்தினார். பெங்களூரு செயின்ட் பிளாரெட் கல்லுாரி தேர்வு கட்டுப்பாட்டாளர் வணிகவியல் ஆராய்ச்சி மையம் தலைவர் சிவ முருகன் பேசினார். 62 மாணவர்கள் பங்கேற்று பயனடைந்தனர். மாணவி மகாலட்சுமி நன்றி கூறினார். ஏற்பாடுகளை முதுகலை வணிகவியல் துறை சங்க பொறுப்பாளர் சதீஷ்குமார் செய்தார். தேசிய நுகர்வோர் தினம்
சிவகாசி: சிவகாசி எஸ்.எப்.ஆர்., மகளிர்கல்லுாரியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் சார்பில் தேசிய நுகர்வோர் தினம் கொண்டாடப்பட்டது. கல்லுாரி தலைவர்திலகவதி, செயலர் அருணா புரவலர்களாக வழி நடத்தினர். கல்லுாரி முதல்வர் சுதா பெரியதாய் தலைமை வகித்தார்.குடிமக்கள் நுகர்வோர் மற்றும் திட்ட அலுவலர் மேகலாதேவி வரவேற்றார். கல்லுாரி சமூக சேவை அமைப்பு ஒருங்கிணைப்பாளர் விஜயபிரியா கருத்துரை வழங்கினார். மாவட்ட வழங்கல் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரி அனிதா பேசினார். குடிமக்கள் நுகர்வோர் மன்றம் சார்பில் மாணவர்கள், மக்களுக்கு ஏற்படுத்திய விழிப்புணர்வு நிகழ்வு காணொளி காட்சியாக திரையிடப்பட்டது.
29-Dec-2024