உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அருப்புக்கோட்டையில் ஏர்ஹாரன் பறிமுதல்

அருப்புக்கோட்டையில் ஏர்ஹாரன் பறிமுதல்

அருப்புக்கோட்டை : தினமலர் செய்தி எதிரொலியாக வாகனங்களில் பொருத்தப்பட்ட ஏர்ஹாரன்களை வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பறிமுதல் செய்தார்.அருப்புக்கோட்டையில் வாகனங்களில் காதை செவிடாக்கும் வகையில் ஏர் ஹாரன்களை பொருத்தி உள்ள தான செய்தி தினமலர் நாளிதழில் வந்தது.இதையடுத்து காந்தி நகர் சந்திப்பில் நேற்று மாலை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கண்ணன், டிராபிக் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் மற்றும் போலீசார் அந்தப் பகுதி வழியாக சென்ற லாரிகள், பஸ்கள், ஆட்டோக்கள் ஆகியவற்றை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ஒரு சில வாகனங்களில் பொருத்தப்பட்ட ஏர் ஹாரன்களை பறிமுதல் செய்தனர். பின்பு வாகன ஓட்டுனர்களிடம் எச்சரிக்கை செய்து அனுப்பினர்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை