தன்னம்பிக்கை நிகழ்ச்சி
சிவகாசி : சிவகாசி எஸ்.எப். ஆர்., மகளிர் கல்லுாரியில் மாணவர் நலன் சார் சேவை சார்பில் மாணவிகளுக்கு தன்னம்பிக்கை நிகழ்ச்சி நடந்தது. மாணவர் நலன் சார் சேவை ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ்செல்வி வரவேற்றார். கல்லுாரி முதல்வர் சுதா பெரிய தாய் தலைமை வகித்தார். தமிழ் துறை தலைவர் பொன்னி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். எழுத்தாளர் ஆண்டாள் பிரியதர்ஷினி பேசியதாவது, பெண்களுக்கு கல்வியே அடையாளம். பெண்களின் வார்த்தை மிகவும் வலிமையானது. பெண்கள் தங்களது இலக்குகளை சரியாக நிர்ணயித்துக் கொண்டு அதன்படி நடக்க வேண்டும். பெண்கள் தற்காப்பு கலைகளோடு பிறரிடம் நேசமாக பழகவும் கற்றுக் கொள்ள வேண்டும், என்றார். மாணவி அனுபிரபா நன்றி கூறினார். ஏற்பாடுகளை மாணவர் நலன் சார் பேரவை குழு பேராசிரியர்கள் செய்தனர்.