உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கலெக்டர் அலுவலக வளாகத்தில் மீண்டும் செப்டிக் டேங்க் கழிவுநீர்

கலெக்டர் அலுவலக வளாகத்தில் மீண்டும் செப்டிக் டேங்க் கழிவுநீர்

விருதுநகர்; விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மீண்டும் செப்டிக் டேங்க் கழிவுநீர் கொட்டப்படுகிறது. இதனால் மக்கள் துர்நாற்றத்தால் அவதி யடைந்து வருகின்றனர். கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. 2024 ஏப். 7ல் வாகனத்தில் இருந்து மனித கழிவுகளை கொட்டிய ஆதவன் செப்டிக் டேங்க் லாரி உரிமையாளர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. செப்டிக் டேங்க் கழிவுகளை கொட்ட அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து உரிமம் பெற வேண்டும். இந்த உரிமத்தில் கழிவுநீர் உந்துநிலையங்கள், சுத்திகரிப்பு நிலையங்களில் மட்டுமே கழிவுநீரை வெளியேற்ற வேண்டும் என்ற விதிகள் உள்ளன. மாவட்டத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் மூலம் 45 செப்டிக் டேங்க் நீர் அகற்றும் வாகனங்கள் அனுமதி பெற்றுள்ளன. கடந்தாண்டு வழக்கு பதியப்பட்ட செப்டிக் டேங்க் லாரி ஸ்ரீவில்லிபுத்துார் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வாகன வகை மாற்றம் அனுமதி பெற்றுள்ளது. ஆனால் செப்டிக் டேங்க் கழிவு கொட்டுவதற்கான உரிமத்தை ஸ்ரீவி., நகராட்சியில் பெறவில்லை. இது போன்று பல வாகனங்கள் செயல்படுகின்றன. உள்ளாட்சிகளில் அனுமதி பெறாலே இயங்கு கின்றன. விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரியின் பின்புறம் கடந்தாண்டை போன்று நேற்றும் லாரி ஒன்று கழிவுகளை கொட்டிய நிலையில் திரும்பியது. சட்ட விதிகளுக்குப் புறம்பாக கழிவு நீரகற்றும் பணிகளை செய்வோர் மீதும், திறந்தவெளி, நீர்நிலைகளில் கழிவுநீரை வெளியேற்றுவோர் மீதும் வழக்கு பதிந்து, சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்து விதிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ள போதிலும் இது தொடர்கிறது. கலெக்டர் அலுவலக வளாகத்திலே இது தொடர்வது பெரும் வேதனை. சுத்திகரிப்பு நிலையங்கள் என்பது வெறும் பேசுபொருளாகவே உள்ளன. விருதுநகரில் மட்டும் செயல்பாட்டில் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர்த்து நீர்நிலைகள், திறந்தவெளிகளில் செப்டிக் டேங்க் கழிவுகளை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை