உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஊருணியில் கழிவுநீர்: கருப்பு நிறத்தில் குடிநீர்

ஊருணியில் கழிவுநீர்: கருப்பு நிறத்தில் குடிநீர்

திருச்சுழி: திருச்சுழி அருகே விடத்தகுளம் ஊருணியில் கழிவு நீர் கலந்து தண்ணீர் கருப்பு கலரில் உள்ளதால் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது விடத்தகுளம். இங்குள்ள மீனாட்சி அம்மன் கோயில் அருகில் ஊருணி உள்ளது. முன்பு இதிலிருந்து தண்ணீரை எடுத்து கோயிலுக்கு பயன்படுத்துவர். இரண்டு ஆண்டுகளுக்கு முன் 12 லட்சம் நிதியில் ஊருணி தூர் வாரப்பட்டு படித்துறை கட்டப்பட்டது. தற்போது பெய்த தொடர் மழையினால் ஊருணி நிறைந்துள்ளது. ஊராட்சி நிர்வாகம் சரிவர பராமரிப்பு செய்யாததால் கழிவுநீர் கலந்து மாசடைந்து உள்ளது. இதனால் இதில் வளர்க்கப்பட்ட தாமரை செடிகள் அழுகி விட்டன. கழிவுநீர், குப்பைகள் கலந்துள்ளதால் தண்ணீர் கருப்பு கலரில் மாறிவிட்டது. கொசுக்களின் உற்பத்தி கேந்திரமாக உள்ளது. ஊராட்சி அலுவலகம், குடியிருப்புகள், பள்ளிகள் உள்ளதால் கொசு தொல்லை தாங்க முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். கால்நடைகள் இதில் உள்ள தண்ணீரை குடிக்க தயங்குகின்றன. பொதுமக்கள் கை கால் கழுவினால் கடுமையான அரிப்பு ஏற்படுகிறது. ஊராட்சி நிர்வாகம் ஊருணியில் உள்ள தண்ணீர் முழுவதையும் வெளியேற்றி பராமரிப்பு செய்து பாதுகாப்பான மழை நீர் சேரும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ