மேலும் செய்திகள்
சூப்பர் ரிப்போர்டர் :
08-Nov-2024
விருதுநகர் : கழிவுநீர் தேக்கம், ரோடு, வாறுகால் இல்லாததால் மழைநீர், கழிவு நீர் ரோட்டில் ஆறாக ஓடுதல், ஜல் ஜீவன் குழாய் பதித்தும் குடிநீர் விநியோகம் இல்லை என எண்ணற்ற பிரச்னைகளில் சிக்கி தவிக்கின்றனர் விருதுநகர் ரோசல்பட்டி சத்யசாய், ஜக்கத்தேவி நகர் மக்கள்.விருதுநகர் அருகே உள்ள ரோசல்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சத்யசாய், ஜக்கத்தேவி நகர் பகுதிகளில் 200க்கும் அதிகமான குடும்பங்கள் வசிக்கிறது. இப்பகுதிகளில் ரோடு, வாறுகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை.இதனால் மழைக்காலத்தில் மழை நீர், கழிவு நீர் கலந்து ரோட்டில் ஆறாக ஓடுகிறது. மேலும் கண்மாய் நிறைந்தால் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்து சேறும், சகதியுமாகி வாகனங்களில் குழந்தைகள், பெண்கள், வயதானவர்களை அழைத்து செல்ல முடியாத நிலை நீடிக்கிறது.இங்கு ஜல் ஜீவன் திட்டத்தில் குடிநீர் குழாய் அமைத்து பல மாதங்கள் ஆகிறது. ஆனால் இதுவரை குடிநீர் விநியோகம் இல்லை. வீட்டிற்கு தேவையான குடிநீரை விலை கொடுத்து வாங்கும் நிலையே உள்ளது.சத்யசாய் நகரில் வீடுகளில் இருந்து வெளியேற்றும் கழிவு நீர் காலிமனையில் தேங்கி குளம் போல மாறியுள்ளது. துர்நாற்றத்தால் குடியிருப்பு வாசிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நோய்பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. காந்தி தெருவிலும் இதே நிலை தொடர்கிறது.மெயின் ரோட்டில் இருந்து செல்லும் பிரதான ரோட்டில் கால்வாய் பாலம் அருகே தினமும் குப்பை மலை போல தேங்குகிறது.
ஜல் ஜீவன் திட்டத்தில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் குடிநீரை விலை கொடுத்து வாங்கும் நிலை தொடர்கிறது. வீடுகளுக்கான குடிநீர் விநியோகிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.- முனியப்பன், குடியிருப்போர்.