மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
12 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
12 hour(s) ago
சிவகாசி: 22 ஆண்டுகளுக்கு பிறகு கண்மாய் நிறைந்தும் கழிவு நீர் கலப்பு, ஆக்கிரமித்துள்ள முட்புதர்கள், நீலத்தடி நீரும் பாதிப்பால் பயனில்லாமல் போன செங்குளம் கண்மாயால் மக்கள் வருத்தத்தில் உள்ளனர்.சிவகாசி சாட்சியாபுரத்தில் உள்ள செங்குளம் கண்மாய் பெயருக்கு ஏற்ற வகையில் செந்நிறமாக அப்படியே தண்ணீர் குடிக்கும் வகையில் இருந்தது. தற்சயம் கண்மாயில் கழிவுநீர் மட்டுமே கலப்பதால் எந்தவித பலனுமில்லாமல் உள்ளது. மேலும் இந்த கண்மாய் 30 ஆண்டு முன்பு வரை இப்பகுதியில் பயிரிட்ட சோளம், வாழைக்கு பாசன வசதியாக இருந்தது. துார்வாரப்படாததாலும், ஆக்கிரமிப்பினாலும் கண்மாய்க்கு தண்ணீர் வராததால் பாசன வசதி பெற்ற இடங்கள் குடியிருப்புகளாக மாறிவிட்டன.இப்பகுதியினர் குளிக்க, துணி துவைக்க என பல்வேறு தேவைகளுக்கும் கண்மாயினை பயன்படுத்தி வந்தனர். நாளடைவில் கண்மாய் முழுவதும் முட்புதர்களாலும், ஆகாய தாமரைகளாலும் ஆக்கிரமிக்கப்பட்டது. நகரின் கழிவுகள் அனைத்தும் கண்மாயினுள் கலக்கப்பட்டது. இப்பகுதியிலுள்ள கடைகள், குடியிருப்புகளின் கழிவுகள் அனைத்தும் கண்மாயிலேயே கொட்டப்படுகின்றது. செங்குளம் என்ற பெயரே மாறும் அளவிற்கு தண்ணீர் கலங்கலாக உள்ளது. மேலும் இப்பகுதி குடியிருப்புவாசிகளுக்கு குடிநீர் ஆதாரமாக பயன்பட்டு வந்த கண்மாய் , இப்போது வேண்டாம் என்ற மனநிலைக்கு மக்கள் வந்து விட்டனர். ஏனெனில் போர்வெல் மூலம் கிடைக்கும் தண்ணீர் கலங்கலாகவே வருகின்றது.செங்குளம் கண்மாய்க்கு ஆனையூர் கண்மாய் நிறைந்து பின்னர் தண்ணீர் வரும். அதன்படி சமீபத்தில் பெய்த மழையினால் ஆனையூர் கண்மாய் நிறைந்து செங்குளம் கண்மாய்க்கு தண்ணீர் வந்துள்ளது. இங்கு நிறைந்து பெரியகுளம், சிறுகுளம் கண்மாய்க்கு தண்ணீர் செல்லும். இந்நிலையில் சிவகாசி பகுதியில் பெய்த தொடர்மழையால் செங்குளம் கண்மாய் 22 ஆண்டுகளுக்கு பிறகு நிறைந்து, மாறுகால் சென்றது. இத்தனை ஆண்டுகளுக்கு பின்பு கண்மாய் நிறைந்தும் பலனில்லை என மக்கள் புலம்புகின்றனர். கண்மாய் அருகிலுள்ள சுகாதார வளாகங்களின் செப்டிக் டேங்க் கழிவுகளும் கண்மாயில் கலப்பதால் துர்நாற்றம் ஏற்படுகிறது. தவிர இறைச்சி கடையின் கழிவுகளும் இங்கேயே கொட்டப்படுகின்றது.ஜான்: தண்ணீர் வரத்து இருந்தும் கண்மாய் நிறைந்தும், யாருக்கும் பயனில்லை. கழிவுகளை அப்புறப்படுத்தினால் குடிநீர் ஆதாரமாகவாது பயன்படும். இங்கிருந்து பெரியகுளம் மற்றும் சிறுகுளம் கண்மாய் செல்கின்ற வரத்து கால்வாய்களை துார்வார வேண்டும். ஒட்டு மொத்த கழிவுகளும் கொட்டப்படுவதால் துர்நாற்றம் ஏற்படுவது சுகாதாரக் கேடும் ஏற்படுகிறது.வேல்சாமி: கண்மாய் முழுவதுமே ஆக்கிரமித்துள்ள முட்புதர்கள், ஆகாய தாமரைகளை அகற்ற வேண்டும். கண்மாயினை சுற்றிலுமே முட்புதர்கள் இருப்பதால், கண்மாய் இருப்பதே தெரியவில்லை. கண்மாய்க்குரிய வரத்து கால்வாய்களை துார்வார வேண்டும். கண்மாய் அருகில் குடியிருப்புகள் இருப்பதால், இதிலிருந்து வருகின்ற துர்நாற்றத்தினால் குடியிருப்புவாசிகள் அவதிப்படுகின்றனர்.ஆறுமுகச்சாமி: குடிமாரத்து பணி நடைபெறும் போது இந்த கண்மாயினை கண்டு கொள்ளவில்லை. கண்மாயினை முழுமையாக துார்வார வேண்டும். இங்கு கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டும். குப்பைகள் கொட்டப்படுவதும் தவிர்க்கப்பட வேண்டும். கண்மாய்க்கு தண்ணீர் வருவதே பெரும்பாடாக உள்ளது. அப்படி வந்த தண்ணீரை கலங்கடிப்பதால் மனதிற்கும் கலக்கமாக உள்ளது.புகழேந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்: செங்குளம் கண்மாயிலுள்ள முட்புதர்கள் அகற்றப்படும். கண்மாயினை துார்வாரநடவடிக்கை எடுக்கப்படும்.
12 hour(s) ago
12 hour(s) ago