உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஸ்ரீவி., வைத்தியநாத சுவாமி கோயிலில் திருப்பணிகள் தாமதம்

ஸ்ரீவி., வைத்தியநாத சுவாமி கோயிலில் திருப்பணிகள் தாமதம்

ஸ்ரீவில்லிபுத்தூர், : ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் திருப்பணிகள் முடிவடையாததால் கும்பாபிஷேகம் நடத்த காலதாமதம் ஏற்படுவதால் மூலவரை தரிசிக்க முடியாமல் பக்தர்கள் தவித்து வருகின்றனர்.நூற்றாண்டு பெருமை கொண்ட இந்த கோயிலில் 2006ல் கும்பாபிஷேகம் நடந்தது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். ஆனால் நடத்ததால் கும்பாபிஷேகம் நடத்த வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.அதன்படி 2023 முதல் நன்கொடையாளர்களின் உதவியுடன் திருப்பணிகள் துவங்கியது. இதன்படி ராஜகோபுரம் புதுப்பித்தல், கோயில் உட்பகுதி மற்றும் வெளிப்பகுதியில் பல்வேறு திருப்பணிகள் நடந்தது. துவக்கத்தில் முயல் வேகத்தில் பணிகள் நடந்த நிலையில் முடிவடையும் நேரத்தில் தற்போது ஆமை வேகத்தில் பணிகள் நடக்கிறது.பல மாதங்களாக திருப்பணிகள் நடந்ததால் ஐப்பசி அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை, தைப்பூசத் திருவிழா உட்பட பல்வேறு திருவிழாக்கள் நடக்காமல் மூலவரை தரிசிக்க முடியாமல் பக்தர்கள் தவித்தனர்.எப்போது கும்பாபிஷேகம் என பக்தர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்ததால் பிப்ரவரி 2 அன்று கும்பாபிஷேகம் நடத்த நாள் குறிக்கப்பட்டது. ஆனால், திருப்பணிகள் முழு அளவில் முடியாததால் அந்த நாளில் கும்பாபிஷேகம் நடத்த அறநிலையத்துறை அனுமதிக்கவில்லை.இதனால் தை அமாவாசை மற்றும் மகா சிவராத்திரி நாட்களிலும் சுவாமியை தரிசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் ஸ்ரீவில்லிபுத்தூர் பக்தர்கள் மிகுந்த மன வேதனைக்கும், தவிப்பிற்கும் ஆளாகியுள்ளனர். எனவே, விரைவில் கும்பாபிஷேகம் நடத்த அறநிலையத்துறை விரைந்து செயல்பட வேண்டுமென பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.இதுகுறித்து கோயில் செயல் அலுவலர் ஜவகர் கூறியதாவது; திருப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் பணி முடிவடைந்து கும்பாபிஷேகம் தேதி அறிவிக்கப்படும். என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி