உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / முற்றுகை போராட்டம்

முற்றுகை போராட்டம்

சிவகாசி: விஸ்வநத்தம், ஆணையூர் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் கேட்டு மக்கள்  சிவகாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.விஸ்வநத்தம் ஊராட்சி மாரியம்மன் கோயில் தெருவில் நீண்ட நாட்களாக ரோடு சேதமடைந்துள்ளது. இங்கு மயானம் செல்லும் ரோடு சேதம் அடைந்து மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இதே பகுதியில் சமுதாயக்கூடம் வேண்டும் என 2023 டிச.ல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அப்பகுதியினர் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர். இதேபோல் ஆணையூர் ஊராட்சி கட்டளைப்பட்டியில் ஓடையதுார் வார வேண்டும் என மக்கள் மனு கொடுத்திருந்தனர். அதிகாரிகள் கண்டுகொள்ளாத நிலையில் இப்பகுதியை சேர்ந்த மக்கள்  சிவகாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அதிகாரிகள் பேச்சு வார்த்தைக்கு பின் மக்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை