உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சிவகாசியில் சிலம்ப போட்டி

சிவகாசியில் சிலம்ப போட்டி

சிவகாசி: சிவகாசி மாரனேரி கிருஷ்ணசாமி சர்வதேச பள்ளி, மதுரை சகோதயாப்பள்ளி கூட்டமைப்பின் சார்பில் சிலம்பப் போட்டி நடந்தது. விருதுநகர் மாவட்ட சுற்றுப்பகுதியில் இருந்து 20க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். மூன்று வகையான போட்டிகள் நான்கு பிரிவாக நடந்தது. ஹயக்ரீவாஸ் பள்ளி துணை முதல்வர் பிரீத்தா மேற்பார்வையாளராக பங்கேற்றார். கிருஷ்ணசாமி சர்வதேச பள்ளி தாளாளர்முத்துக்குமார் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கினார். ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் தனலட்சுமி, உடற்கல்வி ஆசிரியர் விஜயன் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை