வெள்ளி தேரோட்டம்
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் வெள்ளித் தேரோட்டம் நடந்தது. கோயிலில் மாசி மாத கார்த்திகை விழா நடந்தது. இதை முன்னிட்டு வெள்ளியில் செய்யப்பட்ட தேரில் வள்ளி தெய்வானை வலம் வந்தார். அருப்புக்கோட்டை முன்னாள் ஒன்றிய சேர்மன் சுப்பாராஜ், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் விஜயகுமார், நகராட்சி துணைத் தலைவர் பழனிச்சாமி மற்றும் தேர் நன்கொடையாளர்கள் தேரை வடம் பிடித்து துவக்கி வைத்தனர். ஏராளமான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.