உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  டிச.11க்குள் எஸ்.ஐ.ஆர்., படிவங்கள் சமர்பிக்கலாம்

 டிச.11க்குள் எஸ்.ஐ.ஆர்., படிவங்கள் சமர்பிக்கலாம்

விருதுநகர்: கலெக்டர் சுகபுத்ரா செய்திக்குறிப்பு: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டசபை தொகுதிகளிலும் (எஸ்.ஐ.ஆர்.,) வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்திற்கான கணக்கெடுப்பு படிவங்கள் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களால் நவ.11 முதல் வழங்கப்படுகிறது. 16 லட்சத்து 26 ஆயிரத்து 485 வாக்காளர்களில் 16 லட்சத்து 26 ஆயிரத்து 028 வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 16 லட்சத்து 13 ஆயிரத்து 476 கணக்கெடுப்பு படிவங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது பூர்த்தி செய்த கணக்கெடுப்பு படிவங்களை பெறுவதற்கு டிச.11 வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ