மேலும் செய்திகள்
ஆசிரியர்களுக்கான மேம்பாட்டு பயிற்சி
25-Oct-2024
கல்லுாரியில் விஜயதசமி விழா
11-Oct-2024
சிவகாசி: சிவகாசி காளீஸ்வரி கல்லுாரியில் தேசிய தர மதிப்பீட்டு குழுவினர் இரு நாட்கள் கல்லுாரியின் தரத்தை மதிப்பீடு செய்தனர். தேசிய தர மதிப்பீட்டு குழுவின் தலைவராக ராஜஸ்தான் உதயப்பூர் சங்கம் பல்கலைக்கழகம் துணை வேந்தர் கருணேஷ் சக்சேனா, உறுப்பினர்களாக கர்நாடகா தயானந்த சாகர் பல்கலை பேராசிரியர் சுனில் மோர், குஜராத் சட்லசனா எஸ்.எம்.டி.ஆர்.எம்., பிரஜாபதி கலை கல்லுாரி முதல்வர் பரோட் ஜெயேஷ்குமார் நாதனால் பங்கேற்றனர்.இக்குழுவினர் கல்லுாரியின் பாடத்திட்டம் மேம்பாடு கற்றல் கற்பித்தல் திறன் மற்றும் மதிப்பீடு ஆராய்ச்சி மற்றும் சமூகப் பணி உள்கட்டமைப்பு மாணவர்கள் மேம்பாடு தலைமை மற்றும் நிர்வாகம் கல்லூரியின் விழுமியங்கள் சிறந்த நடைமுறைகள் ஆகியவற்றினை ஆய்வு செய்து சமர்ப்பித்த அறிக்கையின் படி தேசிய தர மதிப்பீட்டு குழு இக்கல்லுாரிக்கு 'ஏ பிளஸ்' தகுதியை வழங்கியது. இத்தகுதியை பெற உறுதுணையாக இருந்த கல்லுாரி முதல்வர் பாலமுருகன், பேராசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மாணவர்களை கல்லுாரி செயலாளர் செல்வராஜன் பாராட்டினார்.
25-Oct-2024
11-Oct-2024