சிவகாசி எஸ்.எம். தெருவில் பேவர் பிளாக் பதிக்கப்பட்டது
சிவகாசி: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக சிவகாசி எஸ்.எம். தெருவில் புதிதாக பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டது.சிவகாசி மாநகராட்சி 42 வது வார்டு எஸ்.எம்., தெருவில் குழாய் பதிப்பதற்காக நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ரோடு தோண்டப்பட்டது. ஆனால் சேதமடைந்த ரோடு மீண்டும் சீரமைக்கப்படவில்லை. குறுகிய தெரு என்பதால் டூவீலர் சென்று வருவதே மிகவும் சிரமமாக இருந்தது. மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதால் குடியிருப்புவாசிகள் வெளியே வருவதிலும் சிரமம் ஏற்பட்டது.வாறுகால் தூர்வாரப்படாததால் கழிவு நீர் ஒரே இடத்தில் தேங்கி துர்நாற்றத்தை ஏற்படுத்தியது. எனவே உடனடியாக ரோட்டை சீரமைக்க வேண்டும், வாறுகால் துார்வார வேண்டும் என தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக எஸ்.எம். தெருவில் புதிதாக பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியினர் மகிழ்ச்சி அடைந்தனர்.