உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அனைத்து வகுப்பறைகளிலும் ஸ்மார்ட் டிவி இணைப்பு அசத்தும் ஆமத்துார் அரசு மேல்நிலைப்பள்ளி

அனைத்து வகுப்பறைகளிலும் ஸ்மார்ட் டிவி இணைப்பு அசத்தும் ஆமத்துார் அரசு மேல்நிலைப்பள்ளி

விருதுநகர்: விருதுநகரில் அனைத்து வகுப்பறைகளிலும் ஸ்மார்ட் 'டிவி' இணைப்பு வழங்கப்பட்டு, முன்மாதிரி அரசு பள்ளியாக திகழ்கிறது ஆமத்துார் அரசு மேல்நிலைப்பள்ளி.மாவட்டத்தில் பல்வேறு அரசு பள்ளிகள், அதன் பள்ளி மேலாண்மை குழுக்கள் பள்ளிக்கு தேவையான பல்வேறு வசதிகளை செய்து வருகின்றன. அந்த வகையில் முன் மாதிரியாக விருதுநகர் ஆமத்துார் அரசு மேல்நிலைப்பள்ளி வகுப்பறைகளில் ஸ்மார்ட் டிவி இணைப்பு மூலம் மாணவர்களுக்கு கல்வி பயிற்றுவிக்கிறது.1955ல் ஆமத்துார் கோ.ச.கு., அரசு உயர்நிலைப்பள்ளியாக துவங்கிய இப்பள்ளி 2002ல் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்ந்தது. 2021ல் ஆங்கில வழி கல்வி அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது 831 மாணவர்கள் படிக்கின்றனர்.முந்தைய தலைமை ஆசிரியர் சர்மிளா முயற்சியில் இப்பள்ளியில் மூலிகை தோட்டம், 23 வகுப்பறைகளில் ஸ்மார்ட் டிவி இணைப்பு, 20 கணினி வசதியுடன் கூடிய ஹைடெக் லேப் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை மாணவர்கள் முழுமையாக பயன்படுத்தி வருவதை தற்போதைய பள்ளி நிர்வாகமும் உறுதி செய்து வருகிறது.அரசு பள்ளிகளிலே இப்பள்ளி தான் நுாலகங்களை முறையாக பராமரித்து மாணவர்களின் பயன்பாட்டிற்கு அளிக்கிறது. 3600க்கும் மேற்பட்ட புத்தகங்களை கொண்ட நூலக வசதி உள்ளது. இந்த சூழல் எந்த அரசு பள்ளியிலும் இல்லை. 2 ப்ரொஜெக்டர் வசதி, ஒரு ஸ்மார்ட் வகுப்பு, நவீன உபகரணங்களுடன் ஆய்வக வசதியும் உள்ளது.மாணவர்களுக்கு தரமான குடிநீர் வழங்க வேண்டும் என்பதற்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியும், சுத்தமான கழிப்பிட வசதியையும் பள்ளி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.தேசிய திறனறாய்வு, இலக்கிய திறனறி தேர்வுகளுக்கும், நீட், ஜே.இ.இ., நுழைவு தேர்வுகளுக்கும் பயிற்சிகள் வழங்குகின்றனர். கணினி லேப் மூலம் ஆன்லைன் வழி மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிக்கு கிடைத்த விருது, ரொக்க பணத்தை நமக்கு நாமே திட்டத்திற்கு வழங்கியும், எம்.பி., நிதி, சி.எஸ்.ஆர்., என பல்வேறு நிதிகளை பயன்படுத்தி பள்ளியை மேம்படுத்தி வருகின்றனர்.தற்போதைய தலைமை ஆசிரியர் ஜெயமுருகானந்தியும் பல்வேறு செயல்பாடுகளை செய்து வருகிறார். இப்பள்ளியின் பல்வேறு செயல்பாடுகள் முன்மாதிரியாக உள்ளதென அப்பகுதி மக்களும் பாராட்டி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி