உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சிவகாசி, தென்காசி, கொல்லம் வழியாக திருவனந்தபுரத்திற்கு ரயில் சேவை தென் மாவட்ட பயணிகள் எதிர்பார்ப்பு

சிவகாசி, தென்காசி, கொல்லம் வழியாக திருவனந்தபுரத்திற்கு ரயில் சேவை தென் மாவட்ட பயணிகள் எதிர்பார்ப்பு

ஸ்ரீவில்லிபுத்துார்:'நெரிசலை தவிர்க்க மதுரையில் இருந்து சிவகாசி, தென்காசி, கொல்லம் வழியாக கேரள மாநிலம் திருவனந்தபுரம் சென்று திரும்பும் வகையில் பகல், இரவு நேர ரயில்களை தெற்கு ரயில்வே நிர்வாகம் இயக்க வேண்டும்,' என, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்ட பயணிகள் எதிர்பார்க்கின்றனர். தென்மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான மக்கள் புற்றுநோய், இதய நோய், வாதம், நரம்பு, மூட்டு வலி உட்பட பல்வேறு உயிர்காக்கும் சிகிச்சைகள் பெறுவதற்கு திருவனந்தபுரத்தில் உள்ள சித்திரை திருநாள் மருத்துவமனை உட்பட பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று வருகின்றனர். இதற்காக தங்கள் உடல் நலன் மற்றும் பொருளாதார வசதி கருதி, அனந்தபுரி, திருச்சி--திருவனந்தபுரம் இன்டர்சிட்டி, அமிர்தா, சென்னை- - குருவாயூர், மதுரை--குருவாயூர், மதுரை- -புனலூர் ரயில்களில் தான் அதிகளவில் பயணிக்கின்றனர். ஆனால் சிவகாசி, தென்காசி, கொல்லம் வழியாக திருவனந்தபுரம் சென்று வர நேரடி ரயில்கள் இல்லாமல் தென் மாவட்ட மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே மதுரையில் இருந்து சிவகாசி, தென்காசி, கொல்லம் வழியாக திருவனந்தபுரத்திற்கு பகல், இரவு நேரங்களில் சென்று திரும்பும் வகையில் முன்பதிவு இல்லா ரயில்கள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு தென் மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் குரல் கொடுக்க வேண்டும் எனவும் தென் மாவட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி