மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
3 minutes ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
4 minutes ago
ஸ்ரீவில்லிபுத்தூர், பிப். 23--ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் 8 ஆண்டுகளுக்கு பிறகு நாளை பிப். 24 முதல் பிப்.26 வரை 3 நாட்கள் தினமும் இரவு 7:00 மணிக்கு திருமுக்குளத்தில் தெப்ப திருவிழா நடக்கிறது.2015ல் பெய்த மழையால் திருமுக்குளம் நிரம்பி 2016ல் தெப்ப திருவிழா நடந்தது. அதன் பிறகு 2023 நவ., டிசம்பரில் பெய்த மழையால் தற்போது திருமுக்குளம் நிரம்பியது. இதையடுத்து8 ஆண்டுகளுக்கு பிறகு நாளை தெப்பத்திருவிழா நடக்கிறது. நாளை பிப். 24 இரவு 7:00 மணிக்கு தெப்பத்தேரில் ஆண்டாள், ரெங்க மன்னார் எழுந்தருள்கின்றனர் அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தேரோட்டம் துவங்கி 3 முறை தெப்பத்தை தேர் வலம் வருகிறது.பிப்.25 ல் பெரிய பெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவி, பெரியாழ்வார், சீனிவாச பெருமாளும், பிப்ர. 26ல் ராமர், சீதை, லட்சுமணன், கிருஷ்ணன், ருக்மணி, சத்தியபாமா, சுந்தரராஜ பெருமாள், சுந்தரவல்லி, சௌந்தரவல்லி ஆகியோரும் தெப்ப தேரில் வலம் வருகின்றனர்.விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கட் ராமராஜா, செயல் அலுவலர் முத்துராஜா, பட்டர்கள், அலுவலர்கள் செய்துள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூர் போலீஸ்துறை அறிவுரையின் பேரில் பக்தர்களின் பாதுகாப்பு கருவி தெப்பத்தின் நான்கு பக்கமும் தடுப்பு கம்புகள், கேமராக்கள் அமைத்து கண்காணிக்கப்படுகிறது.
3 minutes ago
4 minutes ago