மேலும் செய்திகள்
ஸ்ரீரங்கத்தில் ரயில்கள் நிற்கும்
4 hour(s) ago
கோடவுனில் தீ விபத்து
4 hour(s) ago
ஊருணி தடுப்புச்சுவர் சேதம்: மாணவர்கள் அச்சம்
4 hour(s) ago
பெரிய கண்மாய் கரையை பலப்படுத்த எதிர்பார்ப்பு
4 hour(s) ago
ஸ்ரீவில்லிபுத்தூர், : ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே ஸ்டேஷன் முன்பகுதியில் ரோடு தோண்டப்பட்டுள்ளதால் ரயில் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். வளர்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே ஸ்டேஷனில் லிப்ட் வசதி, நடை மேம்பாலம், டிஜிட்டல் டிஸ்ப்ளே போர்டுகள் அமைத்தல், வாகன காப்பகம் உட்பட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து வருகிறது. இதில் லிப்ட் கட்டுமான பணிகள் முடிவடைந்துள்ளது. விரைவில் லிப்ட் பொருத்தும் பணியும் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிஜிட்டல் டிஸ்ப்ளே போர்டுகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்நிலையில்ரயில்வே ஸ்டேஷன் முன் வாசல் பகுதியில் ஆர்ச் அமைத்து அழகு படுத்துவதற்காக ரோடு தோண்டப்பட்டுள்ளது. இதனால் ஆட்டோக்கள், கார்கள் எளிதில் வந்து செல்ல முடியவில்லை. இதனால் இரவு நேர எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வரும் முதியவர்கள், மாற்று திறனாளிகள், கர்ப்பிணி பெண்கள் நடந்து செல்ல மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.எனவே ரயில்வே ஸ்டேஷன் முன்பகுதியில் செய்ய வேண்டிய வளர்ச்சி பணிகளை கால தாமதமின்றி விரைந்து செய்ய ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றனர்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago