உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நெல் கொள்முதல் நிலையம் திறப்பு ஸ்ரீவி., விவசாயிகள் மகிழ்ச்சி

நெல் கொள்முதல் நிலையம் திறப்பு ஸ்ரீவி., விவசாயிகள் மகிழ்ச்சி

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.ஸ்ரீவில்லிபுத்தூரை சுற்றி ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளது. இங்கு நெல் சாகுபடி அதை அதிகளவில் நடந்து வருகிறது. எனவே, நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டுமென இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.ஆனால், சாகுபடி சமயங்களில் மட்டும் தான் தற்காலிகமாக நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படுகிறது. தற்போதைய பருவத்திலும் அதிக அளவில் நெல் விளைச்சல் ஏற்பட்டு சாகுபடி ஆகிவரும் நிலையில் மடவார் வளாகம் பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இதில் வட்டார மேலாளர் பால்பாண்டி, எழுத்தர் சின்னப்ப ராஜா, உதவியாளர் வெள்ளத்துரை, பெரியகுளம் பாசன விவசாயிகள் சங்க தலைவர் மோகன்ராஜ், விவசாயிகள் தேவப்பிரியன், ராமமூர்த்தி, வழக்கறிஞர் ரமேஷ் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை