|  ADDED : மார் 17, 2024 12:29 AM 
                            
                            
                         
                         
                     
                        
                              
                           
                        
                          
                                                      
விருதுநகர்: விருதுநகர் ஸ்ரீவித்யா பொறியியல், தொழில்நுட்பக்கல்லுாரியில் 16 வது ஆண்டு விழா நடந்தது. ஸ்ரீவித்யா கல்வி குழுமத்தின் தலைவர் திருவேங்கட ராமானுஜ தாஸ் தலைமை வகித்தார்.  கல்லுாரி முதல்வர் லுாயி பிராங்கோ வரவேற்றார்.அண்ணா பல்கலை பருவ தேர்வில் பாட வாரியாக முதல் இரண்டு இடங்களை பெற்ற மாணவர்களுக்கு மதுரை அண்ணா பல்கலை மண்டல வளாக  முதல்வர் லிங்கதுரை பரிசுகளை வழங்கி பேசுகையில், கல்வி என்பது ஊன்றுகோல், இதைப் பயன்படுத்தி மாணவர்கள் சாதனையாளர்களாக மாற வேண்டும். கடின உழைப்பு இருந்தால் கண்டிப்பாக வெற்றியைத் தேடித் தரும், என்றார்.விழாவில் ஸ்ரீவித்யா கல்வி குழும பிற நிறுவன முதல்வர்கள், நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.