உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஸ்ரீவில்லிபுத்துார் -- சிவகாசி ரோடு விரிவாக்கம்

ஸ்ரீவில்லிபுத்துார் -- சிவகாசி ரோடு விரிவாக்கம்

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் இருந்து சிவகாசி வரை, 10 மீட்டர் அகலம் கொண்ட ரோட்டினை 14 மீட்டர் ரோடாக அகலப்படுத்த உள்ளதால் இந்த வழித்தடத்தில் தொழிற்சாலைகள் வணிக வளாகங்கள் வீடுகள் கட்டுபவர்கள் மிகவும் விழிப்புணர்வுடன் செயல்படுவது அவசியமாகும். ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து சிவகாசி, திருத்தங்கல், ஆமத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, நரிக்குடி வழியாக பார்த்திபனூர் வரை 10 மீட்டர் அகலம் உள்ள மாநில நெடுஞ்சாலைத்துறை ரோடு தற்போது பயன்பாட்டில் உள்ளது. இந்த வழித்தடத்தில் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வருவதால் விபத்துகள் தினமும் நடக்கிறது. ரோட்டில் இரு புறமும் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருவதால் கனரக வாகனங்கள் எளிதில் செல்ல முடியவில்லை. இந்நிலையில் தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து பார்த்திபனூர் வரை உள்ள சுமார் 120 கிலோமீட்டர் தூரமுள்ள ரோட்டினை 10 மீட்டர் அகலத்தில் இருந்து 14 மீட்டர் அகலமாக மாற்ற முடிவு செய்தது. அதன்படி முதற்கட்டமாக தற்போது அதிக போக்குவரத்து நெருக்கடி உள்ள சிவகாசி மெப்கோ கல்லூரி மேற்கே ஆற்றுபகுதி முதல் விருதுநகர் செந்தில்குமார் கல்லூரி வரை ரோட்டினை அகலப்படுத்தும் பணி விரைவில் துவங்க உள்ளது. இதேபோல் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து சிவகாசி வரை உள்ள ரோட்டை அகலப்படுத்த மாநில நெடுஞ்சாலை துறை ஆணையம் ஆலோசித்து வருகிறது. அடுத்த நிதி ஆண்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் பட்சத்தில் அதற்கான திட்ட மதிப்பீடு பணி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்த வழித் தடத்தில் வீடுகள், தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள் கட்டுபவர்கள், ரோடு விரிவாக்கத்தை கருத்தில் கொண்டு செயல்படுவது அவசியமாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை