புதுப்பொலிவுடன் ஸ்ரீவில்லிபுத்துார் ரயில்வே ஸ்டேஷன்; நிறைவடையும் நிலையில் அம்ரித் பாரத் திட்ட பணிகள்
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ரயில்வே ஸ்டேஷனில் அம்ரித் பாரத் திட்டப்பணிகள் நிறைவடையும் நிலையை எட்டியுள்ளதால், ஸ்டேஷன் புதுப்பொலிவுடன் காணப்படுகிறது. நாடு முழுவதும் 1275 ரயில் நிலையங்களை மறு வடிவமைத்து அடிப்படை வசதிகள் செய்வதற்காக அம்ரித் பாரத் திட்டம் 2023ல் துவங்கப்பட்டது. இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே ஸ்டேஷனிலும் இத்திட்ட பணிகள் நடந்தது. நடைமேடை உயர்த்துதல் ,நடைமேம்பாலம் அமைத்தல், ஓய்வறை, தங்கும் இடம், சுகாதார வளாக வசதி, லிப்ட் வசதி, டிஜிட்டல் டிஸ்ப்ளே கோச் பொசிஷன் போர்டுகள், போதிய இருக்கை வசதி, குடிநீர் வசதி உட்பட பல்வேறு வசதிகள் செய்யும் பணிகள் கடந்த பல மாதங்களாக இரவு பகலாக நடந்து வந்தது. தற்போது இத்திட்டப் பணிகள் நிறைவடையும் நிலையில் புது பொலிவுடன் ஸ்டேஷன் காணப்படுகிறது. நுழைவாயிலில் ஆர்ச், விசாலமான போர்டிகோ வசதிகளுடன் தற்போது ஸ்டேஷன் கம்பீரமாக காட்சியளிக்கிறது. இன்னும் ஓரிரு வாரத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டு, விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.