ரயிலில் விழுந்து மாணவன் தற்கொலை
விருதுநகர்: விருதுநகர் ரோசல்பட்டி ரோடு தங்கராசு மகன் முகுந்தன்17. தனியார் கல்லுாரியில் பி.சி.ஏ., முதலாமாண்டு படித்து வந்தார். படிப்பு வரவில்லை என வீட்டில் கூறியும் கேட்காததால் நேற்றுமுன்தினம்இரவு 7:30 மணிக்கு விருதுநகர் வாடியான் கேட்டை தாண்டி மணிநகரம் அருகே தண்டவாளத்தில் ஈரோட்டில் இருந்து செங்கோட்டை செல்லும் பயணிகள் விரைவு ரயிலில் அடிபட்டு தற்கொலை செய்து கொண்டார். ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.