உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பஸ் படிக்கட்டில் பயணம் விழுந்து மாணவர் காயம்

பஸ் படிக்கட்டில் பயணம் விழுந்து மாணவர் காயம்

விருதுநகர் : விருதுநகர் அருகே அம்மன்கோவில்பட்டியைச் சேர்ந்தவர் சாம் 20. இவர் விருதுநகரில் தனியார் கல்லுாரியில் பி.இ., இறுதியாண்டு படிக்கிறார். இவர் அக். 8ல் தனியார் பஸ்சில் கல்லுாரிக்கு சென்று வீடு திரும்பும் போது படிக்கட்டில் தொங்கியவாறு பயணித்தார். சிவகாசி ரோட்டில் மாலை 4:45 மணிக்கு உப்போடை பாலத்திற்கு அருகே வளைவில் சென்ற போது படிக்கட்டிலிருந்து தவறி கீழே விழுந்து தலையில் காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆமத்துார் போலீசார் பஸ் டிரைவர் கண்ணன், கண்டக்டர் வேலுச்சாமி மீது வழக்கு பதிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ