பாலப்பணிக்கு குறுகிய மாற்றுப்பாதை பஸ் வர சிரமப்படுவதால் மாணவர்கள் அவதி
விருதுநகர்: விருதுநகரில் இனாம்ரெட்டியபட்டியில் இருந்து ஓ.கோவில்பட்டி செல்லும் ரோட்டில் பெரிய ஆலமரம் அருகில் ஒரு மாத காலமாக பாலம் வேலை நடப்பதால், அருகே மாற்றுப்பாதையில் சென்று வருகின்றனர். குறுகிய பாதையாக இருப்பதால் பஸ்கள் இனாம்ரெட்டியபட்டியோடு நின்று விடுகிறது. இதனால் பள்ளி மாணவர்கள் சிரமப்படுகின்றனர். விருதுநகர் அருகே இனாம் ரெட்டியபட்டியில் இருந்து ஓ.கோவில்பட்டி செல்லும் ரோட்டில் பெரிய ஆலமரம் அருகில் ஒரு மாத காலமாக பாலப் பணிகள் நடந்து வருகிறது. அருகே மண்ணை மெத்தி மாற்றுப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.அந்த பாதையில் அரசு பஸ் செல்ல முடியாத அளவிற்கு குறுகிய பாதையாக உள்ளது. இதனால் பள்ளி மாணவர் களுக்கும், மக்களுக்கும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே அரசு பஸ் செல்லும் அளவிற்கு பாதையை அகலமாக சரி செய்து தர வேண்டும் எனபள்ளி மாணவர்கள், மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். பாதை அகலம் குறைவாக இருப்பதால் இனாம்ரெட்டிய பட்டியோடு பஸ் நின்று விடுகிறது.பாதையை அகலப்படுத்தி பஸ் சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.