உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மாடியில் செயல்படும் துணை அஞ்சலகம் -மாற்றியமைக்க வாடிக்கையாளர்கள் கோரிக்கை

மாடியில் செயல்படும் துணை அஞ்சலகம் -மாற்றியமைக்க வாடிக்கையாளர்கள் கோரிக்கை

சத்திரப்பட்டி: சத்திரப்பட்டியில் செயல்படும் துணை அஞ்சலக கட்டடம் சுலபமாக அணுக முடியாத படிமாடியில் இயங்குவதால் இடமாற்றி அமைக்க வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.ராஜபாளையம் அடுத்த சத்திரப்பட்டி மெயின் ரோடு தனியார் காம்ப்ளக்ஸ் மாடியில் துணை அஞ்சலகம் செயல்பட்டு வருகிறது. சுற்றியுள்ள சமுசிகாபுரம், சங்கரபாண்டியபுரம், வ.உ.சி நகர், எஸ்.ராமலிங்காபுரம், வேலாயுதபுரம், சட்டிக் கிணறு, மொட்ட மலை உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் டெபாசிட், அடிப்படை சேமிப்பு கணக்கு, தனிநபர் வீடு வாகன கடன் மேளா, பென்ஷன், ஆர்.டி போன்ற பல்வேறு தேவைகளுக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் துணை அஞ்சல் அலுவலகம் மாடியில் அமைந்துள்ளதால் ஒவ்வொரு முறையும் வயதானோர், கர்ப்பிணிகள், ஓய்வூதியதாரர்கள் மிகுந்த சிரமத்திற்கு இடையே சென்று வர வேண்டி உள்ளதால் சிரமத்திற்கு உள்ளாகி வருவதால் வாடிக்கையாளர் நலன் கருதி தரை தளம் போன்ற இடத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். ரேவதி, மின்வாரிய ஓய்வு அலுவலர்: கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக அஞ்சலகம் மாடியில் செயல்பட்டு வருகிறது. அடிக்கடி பதிவு தபால், ரெக்கரிங் டெபாசிட், பென்ஷன் போன்ற சேவைகளுக்காக இந்த அலுவலகத்தை நாட வேண்டி உள்ளது. ஒவ்வொரு முறையும் படி ஏறி இறங்குவதில் சிரமம் ஏற்படுவது உடன் தடுமாறி விழுந்து காயம் ஏற்பட்டுள்ளது. மாற்று அலுவலகத்திற்கு அஞ்சல் துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !