உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஏழு ஆண்டுகளாக காத்திருக்கும் கரும்பு விவசாயிகள் --நிலுவைத் தொகைக்கு தீர்வு எதிர்பார்ப்பு

ஏழு ஆண்டுகளாக காத்திருக்கும் கரும்பு விவசாயிகள் --நிலுவைத் தொகைக்கு தீர்வு எதிர்பார்ப்பு

ராஜபாளையம் : சர்க்கரை ஆலை நிர்வாகம் சார்பில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையினை எதிர்பார்த்து ஏழு ஆண்டுகளாக காத்திருக்கும் 283 விவசாயிகளுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தை விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர். விருதுநகர் மாவட்ட கரும்பு விவசாயிகளுக்கு மாவட்ட எல்லையான சிவகிரி அருகே செயல்பட்டு வந்த தனியார் சர்க்கரை ஆலைக்கு சாகுபடி கரும்பினை பதிவு செய்து அனுப்பி வந்தனர். இந்நிலையில் 2018 - - 19ல் கரும்பு சப்ளை செய்த விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை தற்போது வரை வழங்கவில்லை. இதனால் ராஜபாளையத்தில் 240, ஸ்ரீவில்லிபுத்துாரில் 30, வத்திராயிருப்பு 13 என மொத்தம் 283 விவசாயிகள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றும் நிலுவைத் தொகையின் ஒரு பகுதியான ரூ. 2.70 கோடி வழங்காமல் வைத்துள்ளனர். இதன் காரணமாக மறு சாகுபடிக்கான செலவு, வங்கி கடனுக்கான வட்டி செலுத்தாததால் மறு கடனுக்கு அனுமதி கிடைக்காதது போன்ற பல்வேறு பிரச்சனைகளால் அதிக வட்டிக்கு தனியாரிடம் கடன் பெற்று சமாளித்து வருகின்றனர். கரும்பு சாகுபடியில் ஈடுபட்டாலும் அருகில் உள்ள ஆலை இயங்காததால் சிவகங்கை, தேனி மாவட்டத்திற்கு சாகுபடி கரும்பை கொண்டு செல்லும் நிலை ஏற்படுவதால் மாற்று விவசாயத்திற்கும் வழி தெரியாது தவிப்பில் உள்ளனர். இது குறித்து விவசாயி கணேசன் கூறியதாவது; கரும்பு விவசாயிகளின் நிலுவை தொகை பெற்றுத்தருவது குறித்து அரசியல் கட்சிகள் கண்டு கொள்வதில்லை. மாவட்டத்தில் புதிய கலெக்டர் பொறுப்பேற்றுள்ள நிலையில் இதுகுறித்து உடனடி அக்கறை செலுத்தி நிலுவைத் தொகையை வட்டியுடன் பெற்று தர முயற்சிக்க வேண்டுகிறோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை