பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் முதலிடம்
சிவகாசி: இந்தியாவிலேயே முதல் மாநிலமாக 9.5 சதவிகித பொருளாதார வளர்ச்சியுடன் தமிழகம் முன்னிலையில் உள்ளது, என சிவகாசியில் நடந்த கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.சிவகாசியில் நடந்த தி.மு.க., அரசின் நான்கு ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் தங்கம் தென்னரசு மேலும் பேசியதாவது, தமிழ்நாட்டின் நலன்கள் மற்றும் உரிமைகளுக்கு எதிராக தொடர்ந்து 10 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த கட்சியால் ஒரு சாதனையைக் கூட சொல்ல முடியாது.பதவியை காப்பாற்றிக் கொள்வதற்காகவே அ.தி.மு.க., முழு நேரத்தையும் செலவிட்டது. பா.ஜ., சொல்வதை திருப்பிச் சொல்லக்கூடிய கிளிப் பிள்ளையாகவே அ.தி.மு.க., ஆட்சி இருந்தது.இந்தியாவில் இருக்கக்கூடிய முதல்வர்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்தால் தமிழக முதல்வர் தான் முதலிடத்தில் இருப்பார். இந்தியாவிலேயே முதல் மாநிலமாக 9.5 சதவிகித பொருளாதார வளர்ச்சியுடன் தமிழகம் முன்னிலையில் உள்ளது. கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நாம் கேட்கும் நிதியை மத்திய அரசு வழங்குவதில்லை. கடுமையான நிதி நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தமிழக அரசு மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த ஆட்சி தொடர வேண்டும். 2026 சட்டசபை தேர்தலில் நம்மை எதிர்த்து எத்தனை கட்சிகள் வந்தாலும், தி.மு.க.,வின் வெற்றி தொடரும். இவ்வாறு அவர் பேசினார்.