உள்ளூர் செய்திகள்

ஆசிரியர் தின விழா..

விருதுநகர்: விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் ஆசிரியர் தின விழா நடந்தது. முதல்வர் சாரதி வரவேற்றார். கல்லுாரி தலைவர் சம்பத்குமார் தலைமை வகித்தார். உப தலைவர்கள் ராமசாமி, டெய்சிராணி, செயலாளர் மகேஷ்பாபு, பொருளாளர் குமரன், சுயநிதி பாடப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ் பங்கேற்றனர். மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு திரையில் பார்த்து நடனம் ஆடுதல், திரைக்காட்சியும் கற்பனை கதையும் என்ற போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர் களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நுண்கலை மன்ற ஒருங்கிணைப்பாளர் செல்வசங்கரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி