உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மூன்றாவது மொழியை கற்பது எங்கள் எதிர்காலத்திற்கு நல்லது தானே..

மூன்றாவது மொழியை கற்பது எங்கள் எதிர்காலத்திற்கு நல்லது தானே..

மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கைக்கு வேறு எந்த மாநிலத்திலும் வராத எதிர்ப்பு தமிழகத்தில் எழுந்துள்ளது. புதிய கல்விக்கொள்கையின்படி மாணவர்கள் பள்ளியில் மூன்று மொழியை கற்கவேண்டும். முதலில் தாய்மொழி, அடுத்து ஆங்கிலம்; மூன்றாவதாக எந்த மொழியையும் கற்கலாம். ஹிந்தியை தான் கற்க வேண்டும் என்று நிர்பந்தம் இல்லை. ஆனால் ஹிந்தியை மத்திய அரசு திணிக்கிறது என்று தமிழகத்தில் கருத்து பரவுகிறது. அண்டை மாநிலமான கேரளாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போதும் சரி, தற்போது மார்க்சிஸ்ட் ஆட்சியிலும் சரி அங்கு மூன்று மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. இதனால் தான் அதிக கல்வி அறிவு பெற்ற மாநிலமாக கேரளா திகழ்கிறது. காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவிலும் மூன்றாவது மொழியை கற்பிக்கின்றனர். மாணவர்கள் விரும்பி கற்பதை தமிழக அரசியல்வாதிகள் தடுப்பது ஏன். மாணவர்களின் படிப்பில் அரசியல் என்பது தமிழகத்தில் தான் நடக்கிறது. யாருடைய எதிர்காலத்தை வைத்து அரசியல் நடக்கிறதோ... அவர்களிடமே (மாணவர்கள்) மூன்று மொழியை கற்பது குறித்து கேட்டோம்... விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் கூறியது: - நமது நிருபர் குழு -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !