உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  தொழில்நுட்ப பயிற்சி

 தொழில்நுட்ப பயிற்சி

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே வேலாயுதபுரம் கிராமத்தில் வ.உ.சி., சிதம்பரனார் வேளாண்மை பல்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த மாணவர்கள் கிராமப்புற வேளாண்மை பயிற்சி திட்டத்தின் கீழ், கிராமத்தில் முகாமிட்டுள்ளனர். விவசாயிகளுக்கு சாண எரிவாயு தொழில்நுட்பம், பயிர்களில் விதை நேர்த்தி, நடமாடும் மண் பரிசோதனை ஆகியவற்றை செயல் விளக்கம் அளித்தனர். நிகழ்ச்சிக்கு வேளாண் துணை இயக்குனர் சுந்தரவள்ளி தலைமை வகித்தார். வேளாண் அலுவலர்கள் விவசாயிகளுக்கு பல்வேறு தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை