மேலும் செய்திகள்
ஆக்கிரமிப்புகளை அகற்ற இறுதி எச்சரிக்கை
19-Nov-2024
சாலையோர ஆக்கிரமிப்பு அகற்ற கால அவகாசம்
08-Dec-2024
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு நகர் முழுவதும் தற்காலிக ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலை, நகராட்சி, வருவாய் துறை, போலீசார் குழுவாக இணைந்து அகற்றினர்.அருப்புக்கோட்டையில் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்புகள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நகர் முழுவதும் உச்சகட்ட ஆக்கிரப்பில் உள்ளது. இதுகுறித்து நகராட்சி கவுன்சிலர்கள், சமூக ஆர்வலர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற தொடர்ந்து அறிவுறுத்திய நிலையில், கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ள ஆக்கிரமிப்பாளர்களுக்கு நெடுஞ்சாலை துறை மூலம் நோட்டீஸ் வழங்கப்பட்டது. நேற்று காலை நகரில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது. நான்கு குழுக்களாக பிரிந்து நகரில் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். ஏற்கனவே கடைக்காரர்கள் தாங்கள் செய்திருந்த தற்காலிக ஆக்கிரமிப்புகளை அகற்றியதால் வாறுகாலில் செய்த ஆக்கிரமிப்புகளை மட்டும் நெடுஞ்சாலை துறையினர் அகற்றினர். இது முதற்கட்ட ஆக்கிரமிப்பு அகற்றும் பணியாகும். இன்னும் சில நாட்களில் சிறிய அளவில் செய்யப்பட்ட நிரந்தர ஆக்கிரமிப்புகளை அகற்றவும், 3 ம் கட்டமாக நிரந்தர பெரிய ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நெடுஞ்சாலைத்துறையினர் உள்ளனர்.
19-Nov-2024
08-Dec-2024