உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வராத குடிநீருக்கு வந்த பில்

வராத குடிநீருக்கு வந்த பில்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி புறநகர் பகுதியில் குடிநீர் வழங்காமலேயே குடிநீர் கட்டணத்திற்கு ஊராட்சியில் இருந்து பில் அனுப்பியுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது பாலையம்பட்டி ஊராட்சி . இதற்கு உட்பட்ட புறநகர் பகுதிகளான புளியம்பட்டி நெசவாளர் காலனி, கக்கன்ஜி காலனி, சங்கிலி நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஊராட்சி மூலம் குடிநீர் வினியோகம் செய்வதற்கு, ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் பகிர்மான குழாய் 2 ஆண்டுகளுக்கு முன்பு பதிக்கப் பட்டது. பின்பு, பின்பு ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் இணைப்பு வழங்க ஊராட்சி நிர்வாகத்திற்கு 'ரூ.2700 டெபாசிட் கட்டியுள்ளனர். ஆனால் 2 ஆண்டுகளாக குழாயில் குடிநீர் வரவில்லை. ஆண்டுகள் கடந்ததால் கடமைக்காக பதிக்கப்பட்ட பகிர்மான குழாய்கள் அனைத்தும் சேதமடைந்து விட்டன. இந்நிலையில் ஊராட்சி நிர்வாகம் மூலம் கடந்த மாதம் குடிநீர் கட்டணம் செலுத்த வேண்டும் என வீட்டுக்கு வீடு பில் வழங்கப்பட்டுள்ளது. இதில் அதிர்ச்சி அடைந்த மக்கள் வராத குடிநீருக்கு நாங்கள் எப்படி கட்டணத்தை செலுத்துவது என புலம்புகின்றனர். சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட வீடுகளுக்கு குழாய் இணைப்பு மற்றும் வழங்கி உள்ளனர். ஆனால் குடிநீர் வரவில்லை. இதில் குடிநீர் கட்டணம் கட்ட வேண்டும் என அலைபேசி மூலமும் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை