உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சேதமடைந்து வரும் வீரசோழன் கால்நடை மருந்தக கட்டடம்

சேதமடைந்து வரும் வீரசோழன் கால்நடை மருந்தக கட்டடம்

நரிக்குடி: வீரசோழன் கால்நடை மருந்தக கட்டடம் சேத மடைந்து விபத்து அச்சம் உள்ளதால் சீரமைக்க நட வடிக்கை எடுக்க வேண்டும், என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். நரிக்குடி வீரசோழன் பகுதியில் விவசாயம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. வீணாகும் பயிர் செடிகளை பயனுள்ளதாக மாற்ற, கூடுதல் வருவாயை பெருக்க விவசாயிகள் கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். காலநிலைக்கு ஏற்ப கால்நடைகளுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படும். நீண்ட தூரம் கொண்டு சென்று சிகிச்சை பெற சிரமப்பட்டனர். இதை யடுத்து அங்கு 8 ஆண்டு களுக்கு முன் ரூ. 21 லட்சம் செலவில் கால்நடை மருந்தகம் கட்டப்பட்டது. தற்போது கட்டடம் சேதம் அடைந்து, தரை தளம் உடைந்து, பில்லர்களில் கம்பிகள் வெளியில் தெரிகின்றன. எப்போது இடிந்து விழுமோ என்கிற அச்சத்தில் விவசாயிகள் கால்நடைகளுக்கு பரி சோதனை செய்கின்றனர். மருத்துவர், உதவியாளர் அக்கட்டடத்தில் அச்சத்துடன் பணியாற்றி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு விபத்து ஏற்படு வதற்கு முன் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ