மேலும் செய்திகள்
ஊட்டியில் 4வது புத்தக திருவிழா துவங்கியது
25-Oct-2025
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் நான்காவது புத்தகத் திருவிழா நவ. 14 முதல் நடக்கவுள்ளதை முன்னிட்டு 'அறிவும் வளமும்' என்ற தலைப்பில் லோகோ வெளியிடப்பட்டது. நான்காவது விருதுநகர் புத்தக திருவிழா - 2025 'அறிவும் வளமும்'என்ற தலைப்பில், விருதுநகர் கே.வி.எஸ்., மேல்நிலைப்பள்ளி வளாக மைதானத்தில் நவ. 14 முதல் 24 வரை 11 நாட்கள் நடக்கிறது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள், தொல்லியல் துறை அரங்குகள், அறிவரங்கம், பசுமை அரங்குகள், புத்தக நன்கொடை அரங்கு, குழந்தைகளுக்கான விளையாட்டு அரங்குகள் உள்ளிட்டவை அமைக்கப் படவுள்ளன. பிரபல எழுத்தாளர்கள், தலைசிறந்த ஆளுமைகளின் சிறப்புரைகள், பட்டிமன்றங்கள், பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள், நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், “அறிவும் வளமும்” என்ற தலைப்பில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட லோகோவை கலெக்டர் சுகபுத்ரா வெளியிட்டார். மக்கள், மாணவர்கள், இளைஞர்கள், புத்தக வாசிப்பை விரும்பும் அனைவரும் பங்கேற்று பயன்பெறலாம்.
25-Oct-2025