மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
46 minutes ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
47 minutes ago
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் உள்ள கல்பட்டறைகள் கிளப்பும் தூசிகளால் வாகன ஓட்டிகள், மக்களுக்கு சுவாச கோளாறு ஏற்படுகிறது.அருப்புக்கோட்டையில் திருச்சுழி ரோடு, காந்தி நகர், நேருநகர், ஆத்திப்பட்டி உட்பட பகுதிகளில் 10 க்கும் மேற்பட்ட கல் பட்டறைகள் உள்ளன. இவற்றில், சிற்பங்கள், கல்தூண்கள், வீடுகளுக்கான கற்கள் செய்யப்படுகின்றன. கற்களை வெட்டி எடுக்க, கட்டிங் மெஷினை பயன்படுத்தும் போது, கல்லிலிருந்து அடர்த்தியாக தூசு கிளம்புகிறது.இவை, காற்றில் பறந்து அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்க்கிறது. புகை போன்று வரும் தூசியை சுவாசிக்கிற போது, மூச்சடைப்பு ஏற்படுகிறது. தினமும் இதை சுவாசிக்கின்ற போது, சுவாச கோளாறு வருகிறது. அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகளில் தூசி படர்ந்து விடுவதால், 1 மணி நேரத்திற்கு 1 முறை வீட்டை சுத்தம் செய்ய வேண்டியுள்ளது என பெண்கள் புலம்புகின்றனர். வீட்டின் வெளியில் காயப்போடுகின்ற துணியிலும் தூசி ஒட்டிக் கொள்கிறது.திறந்தவெளி இல்லாமல் பாதுகாப்புடன் தூசிகள் வெளியேறாதவாறு பணிகளை செய்வதில் கல்பட்டறைகள் அக்கறை காட்டுவதில்லை. மாசு கட்டுப்பாடு வாரியத்தின் எந்தவித பாதுகாப்பு விதிகளை பின்பற்றாமல் கல்பட்டறைகள் தூசியை கிளப்புகின்றன. நகராட்சி சுகாதார பிரிவு, மாவட்ட மாசு கட்டுபாடு வாரியம் எதையும் கண்டு கொள்வதில்லை. கல்பட்டறைகள் பாதுகாப்புடன் செயல்படுகிறதா , என ஆய்வு செய்வதும் இல்லை.குமார், நகராட்சி சுகாதார பிரிவு அலுவலர்: இதுகுறித்து மாசு கட்டுபாடு வாரியம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சி சார்பாக கல் பட்டறைகளுக்கு நோட்டீஸ் விடுகிறோம்.
46 minutes ago
47 minutes ago