மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
3 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
3 hour(s) ago
விருதுநகர் : விருதுநகர் அருகே மீசலுாரில் இருந்து ஆமத்துார் ரோட்டின் செல்லும் வழி எங்கும் பள்ளம் நிறைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர்.விருதுநகர் மீசலுாரில் இருந்து ஆமத்துார் செல்லும் ரோட்டை சூலக்கரை மேடு, கூரைக்குண்டு, செவல்பட்டி, அழகாபுரி, தாதம்பட்டி பகுதி மக்கள் பயன்படுத்தி சிவகாசி செல்கின்றனர். வழக்கமான சிவகாசி ரோட்டில் செல்வதை விட மீசலுார் - ஆமத்துார் ரோட்டில் செல்வதால் விரைந்து சிவகாசிக்கு செல்ல முடியும். இந்நிலையில் இந்த ரோடு பல ஆண்டுகளாக சிதிலமடைந்து ஆங்காங்கே சிறு சிறு பள்ளம் என செல்லும் வழி யெல்லாம் வாகன ஓட்டிகளை திண்டாட செய்கிறது.இந்த வழியில் புதிய வாகனம் சென்றாலும் ரோட்டின் முடிவில் 'கட கட' என சத்தம் கேட்க வாய்ப்புள்ளது. அந்தளவுக்கு இந்த ரோட்டில் உள்ள தொடர் சிறு சிறு பள்ளங்கள் போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக உள்ளது.தற்போது இந்த ரோடு சேதத்தால் சூலக்கரைமேடு, கூரைக்குண்டு, செவல்பட்டி மக்கள் வழக்கமான சிவகாசி ரோட்டை பயன்படுத்தி பயணிக்கின்றனர். ஆகவே இந்த ரோட்டின் பள்ளங்களை சரி செய்து போக்குவரத்துக்கு ஏற்றதாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
3 hour(s) ago
3 hour(s) ago