உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சென்னைக்கு சென்ற சிறப்பு பஸ்கள் ஸ்ரீவில்லிபுத்துாரில் தவித்த பயணிகள்

சென்னைக்கு சென்ற சிறப்பு பஸ்கள் ஸ்ரீவில்லிபுத்துாரில் தவித்த பயணிகள்

ஸ்ரீவில்லிபுத்தூர்: சென்னைக்கு ஏராளமான சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்ட நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து மதுரை, தேனி போன்ற வெளியூர்களுக்கு செல்ல போதிய பஸ்கள் இல்லாமல் பயணிகள் தவித்தனர்.தீபாவளி முடிந்து சென்னை செல்வதற்கு ஏராளமான பஸ்கள் இயக்கப்பட்ட நிலையில் செங்கோட்டை, -மதுரை வழித்தடத்தில் போதிய அளவிற்கு பஸ் இல்லாத நிலை ஏற்பட்டது. இதனால் செங்கோட்டையிலிருந்து புறப்பட்டு வரும் பஸ்கள் ராஜபாளையத்தில் நிரம்பி வழிந்ததால் ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் ஸ்டாண்டிற்கு வராமல் சென்றன.இதனால் ஸ்ரீவில்லிபுத்தூர் இருந்து மதுரை, தேனி போன்ற நகரங்களுக்கு செல்ல பஸ்கள் கிடைக்காமல் நீண்ட நேரம் மக்கள் காத்து கிடக்கும் நிலைக்கு ஆளாகினர். இதனால் வத்திராயிருப்பு பகுதியில் இயங்கும் சில டவுன் பஸ்களை, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் இயக்கினர். இதனால் சுந்தரபாண்டியம் போன்ற கிராமங்களுக்கு செல்லும் பஸ்கள் இயக்குவதில் காலதாமதம் ஏற்பட்டது இதனால் அப்பகுதி மக்கள் போக்குவரத்துக் கழக அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.எனவே ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து மதுரை, விருதுநகர், தேனி போன்ற நகரங்களுக்கு நேரடி பஸ்கள் இயக்க அரசு போக்குவரத்து கழகம் முன்வர வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !