உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தாலியை பறித்தவரை பிடித்து கொடுத்த பெண்

தாலியை பறித்தவரை பிடித்து கொடுத்த பெண்

நரிக்குடி : நரிக்குடியைச் சேர்ந்த மருதுபாண்டி மனைவி பூங்கொடி. நேற்று முன் தினம் இரவு கடையில் பொருட்கள் வாங்க நடந்து சென்றார். அப்போது அழகிய மீனாள் கோயில் அருகே டூவீலரில் நின்று கொண்டிருந்த இருவர் பூங்கொடியின் கழுத்தில் கத்தியை வைத்து, அவர் அணிந்திருந்த 7 பவுன் தங்க தாலி செயினை பறித்து டூவீலரில் தப்ப முயன்றனர். அவர்களை கீழே தள்ளி விட்டு, அதில் ஒருவனை விடாபிடியாக பிடித்து, போராடி, போலீசாரிடம் ஒப்படைத்தார். திருடனுக்கு காயம் ஏற்பட்டதையடுத்து அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விசாரணையில் ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தராவை சேர்ந்த பருத்தி வீரன் (எ) சேதுபதி. இவர் மீது ஏற்கனவே பல்வேறு கொலை, கொள்ளை, வழிப்பறி முயற்சி வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது. இவருடன வந்த மற்றொருவரை நரிக்குடி போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ