உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தேங்கும் கழிவுநீர், தெருவிளக்கு, சுகாதாரவளாகம் இல்லை

தேங்கும் கழிவுநீர், தெருவிளக்கு, சுகாதாரவளாகம் இல்லை

ராஜபாளையம் : ராஜபாளையம் அருகே மேலப்பாட்ட கரிசல் குளம் ஊராட்சி தென்றல் நகரில் தெருக்களில் விளக்கு வசதி, மகளிர் சுகாதார வளாகம்,ரோடு வசதி போன்ற பிரச்னைகளால் இந்திரா நகர் குடியிருப்போர் சிக்கி தவிக்கின்றனர்.இது குறித்து இந்திரா நகர் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் பிரகாஷ், அர்ஜுனன், விஜயகுமார், செந்தில்குமார், தனலட்சுமி, ஜோதி கனி கூறியதாவது:செண்பகத்தோப்பு மெயின் ரோடு ஒட்டி 15க்கும் மேற்பட்ட தெருக்களுடன் 30 ஆண்டுகளுக்கு முன்பு குடியிருப்பு அமைந்துள்ளது. ஓடையில் முட்புதர்கள் படர்ந்து உள்ளதால் மழை நேரங்களில் கழிவு நீர் தெருக்களில் புகுந்து விடுகிறது.குடியிருப்புகளில் குப்பை வாங்க ஆட்கள் வருவதில்லை. குப்பை அகற்றப்படாமல் ஆங்காங்கு தேங்கி கழிவுகள் அகற்றாமல் ஓடையில் குவிக்கின்றனர். குடியிருப்புகள் உருவாகி 30 ஆண்டுகள் கடந்தும் மகளிர்க்கான சுகாதார வளாகம் இல்லாததால் ஓடையையும் புதர் பகுதியிலும் திறந்த வெளியாக உபயோகிக்கின்றனர்.இரவு நேரங்களில் புதர் பகுதியில் ஒதுங்குவதால் விஷ பூச்சிகள் அபாயம் ஏற்பட்டுள்ளது.மெயின் ரோட்டில் இருந்து குடியிருப்புகளுக்கு நுழையும் பகுதியில் மின்விளக்கு வசதி இல்லை. தாமிரபரணி குடிநீர் வசதி யின்றி ஆதியூர் கண்மாயிலிருந்து வரும் நீரையே குடிநீராக உபயோகிக்கும் நிலை உள்ளது. தென்றல் நகர் பகுதியில் இருந்து வெளியேறும் குடியிருப்பு கழிவுநீர் இந்திரா நகர் குடியிருப்பு வழியே வடிவதால் ஓடைகளில் அடைப்பு ஏற்பட்டு தெருக்களில் தேங்கி சுகாதார சிக்கல் ஏற்படுத்துகிறது.இதற்கு அடுத்துள்ள ஜே.ஜே நகர் குடியிருப்புக்கு வடிந்து செல்ல வழியின்றி குழந்தைகள் படிக்கும் அங்கன்வாடி அருகே பள்ளம் தோண்டி சாக்கடை கழிவுகள் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. மேல்நிலை குடிநீர் தொட்டி முறையாக சுத்தம் செய்யப்படுவது இல்லை.சாக்கடையை அகற்றம், குப்பைகள் வெளியேற்றம், மேல்நிலை தொட்டி சுத்தப்படுத்துதல் என அடிப்படை வசதிகளையும் செய்து தர ஆள் இல்லை. நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை