நான் முதல்வன் திட்டத்தில் திருச்சுழி மாணவி மாநில போட்டிக்கு தேர்வு
திருச்சுழி: திருச்சுழி அரசு கலைக்கல்லூரி மாணவி வளர்மதி 'நான் முதல்வன் 'திட்டத்தின் மூலம் மாநில அளவில் நடக்கும் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள தேரவு செய்யப்பட்டுள்ளார். தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தில் அரசு பள்ளி, கல்லூரி மாணவர்களின் தனி திறமைகளை அடையாளம் கண்டு உயர் கல்வி, வேலை வாய்ப்புகளில் வெற்றி பெறுவதற்கு தேவையான பயிற்சியை பெறும் வகையில் பல்வேறு தொழில் முறை கல்வி சார்ந்த பயிற்சிகள் இலவசமாக கல்லூரியில் நடத்தப்பட்டு வருகிறது. இதில், ஓரக்கிள் தனியார் நிறுவனம் மூலம், மதுரை காமராஜ் பல்கலையில் பல்கலை., அளவில் 54 பேர்களுக்கு பயிற்சிகள் வழங்கியது. இதில் திருச்சுழி அரசு கல்லூரியில் கம்ப்யூட்டர் அறிவியல் துறை மாணவி வளர்மதி 2ம் மாநில அளவில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளார். மாணவியை கல்லூரி முதல்வர் எஸ்தர், திட்ட ஒருங்கிணைப்பாளர் தீபா ராணி மற்றும் பேராசிரியர்கள் வாழ்த்தினர்.